Breaking News
Home / Srilanka News

Srilanka News

கொலைகார நாட்டின் அதிபர் தைரியமாக கொடுத்த வாக்குமூலம்!

இறுதிக்கட்ட ஈழப்போரில் காணாமல் போனவர்கள் இறந்து போய்விட்டார்கள் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்திருப்பது இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான ஒப்புதல் வாக்குமூலமே என இலங்கை அரசை நாம் தமிழர் கட்சி கண்டித்துள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் :- இறுதிக்கட்ட ஈழப்போரில் காணாமல் போனவர்கள் இறந்து போய்விட்டார்கள் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்திருப்பது பேரதிர்ச்சியைத் தருகிறது. …

Read More »

மட்டக்களப்பில் 6 ஊடகவியலாளர்களுக்குக் கொலை எச்சரிக்கை!

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் 6 பேருக்கு கொலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் போடப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு ஊடக அமையத்தின் அலுவலகத்தின் உள்ளேயே குறித்த துண்டுப்பிரசுரங்கள் இன்று போடப்பட்டுள்ளன என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்கிரமதுங்கவின் நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொண்டவர்களின் ஒளிப்படத்தில் குறித்த ஊடகவியலாளர்கள் 6 பேரின் முகங்களுக்கு வட்டம் இடப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. …

Read More »

மலையகத்தில் குளவிக்கொட்டு! ஒருவர் பலி!! 40 பேர் பாதிப்பு!!!

மலையகத்தில் இன்று மாத்திரம் மூன்று தோட்டங்களில் குளவிக்கொட்டு இடம்பெற்றுள்ளது. இதில் சிக்குண்டு தோட்டத் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், 40 தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். திம்புள்ள ஹட்டன், திம்புள்ள தோட்டத்திலே குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலியாகியுள்ளார். பத்தனை – கெலிவத்தை தோட்டத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான எம்.ஈஸ்வரன் (வயது – 56) என்பவரே உயிரிழந்துள்ளார். அத்துடன், குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் 4 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். …

Read More »

தந்தையால் மனம் உடைந்த மகள் தூக்கிட்டு தற்கொலை!

“அப்பா சந்தோஷமா இருங்க…இனி நா எதுவும் கேக்கமாட்டே… அம்மாகூட சண்டபோட வேனா… தாத்தா, பாட்டி, அம்மா, தம்பி எல்லாம் என்ன மன்னிச்சிடுங்க……” – இப்படி உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் இளம் யுவதி ஒருவர். இந்தச் சோக சம்பவம் ஹட்டன் – திம்புள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபில்ட் தோட்டத்தின் சமாஸ் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 24 வயதுடைய இராஜதுரை நவலெட்சுமி என்பவரே இவ்வாறு தற்கொலை …

Read More »

ஐஎஸ் அமைப்புக்கு புதிய தலைவர் அறிவிப்பு!

சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி, இஸ்லாமிய தேசம் அமைக்கும் நோக்கத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ்(இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா) தீவிரவாதிகள் அந்நாடுகளில் ஊடுருவினர். மேலும், பல நாடுகளில் பயங்கர குண்டுவெடிப்புகளை நடத்தி, உலகிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கினர். சர்வதேச அளவில் மிகவும் பயங்கரமான அமைப்பாக ஐ.எஸ். அமைப்பு கருதப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க படைகளின் தாக்குதலில் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக கடந்த ஆண்டு அக்.27-ம் தேதி அமெரிக்க …

Read More »

ஜனநாயக பின்னடைவுகள் நாடுகள் பட்டியலில் இந்தியா

ஜனநாயகக் குறியீட்டின் உலகளாவிய தரவரிசையில் ஜனநாயக பின்னடைவுகள் நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற்று உள்ளது. ஜனநாயகக் குறியீட்டின் உலகளாவிய தரவரிசையில் இந்தியா 10 இடங்களைக் குறைந்து 51 வது இடத்திற்கு பின்தங்கி உள்ளது. நாட்டில் மக்களின் உரிமைகள் பறிப்பது என்பது ஜனநாயக பின்னடைவுக்கு முதன்மைக் காரணம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தேர்தல் செயல்முறை மற்றும் பன்மைத்துவம், அரசாங்கத்தின் செயல்பாடு, அரசியல் பங்கேற்பு, அரசியல் கலாச்சாரம் மற்றும் மக்கள் …

Read More »

யாழ். பல்கலை மருத்துவபீட சிங்கள மாணவி கழுத்து அறுத்துப் படுகொலை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட இறுதியாண்டு சிங்கள மாணவி ஒருவர் கழுத்து அறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் யாழ்ப்பாணம், பண்ணைக் கடற்கரைப் பகுதியில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்டவர் பேருவளையைச் சேர்ந்த காஞ்சனா ராெஷானி (வயது 29) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தை அடுத்து தப்பியோடிய கொலையாளியை அங்கு நின்ற மக்கள், விமானப் படை புலனாய்வுப் பிரிவினரின் துணையுடன் மடக்கிப் பிடித்து யாழ். பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். …

Read More »

வரணியில் குளத்தில் மூழ்கி முதியவர் சாவு!

யாழ். தென்மராட்சி, கொடிகாமம், வரணியில் முதியவர் ஒருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வரணி, இடைக்குறிச்சி மேற்கில் உள்ள சின்ன கற்குழுக் குளத்தில் மூழ்கியே அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 60 வயதுடையவர் என்றும், அந்தப் பகுதியில் போக்கிடம் இன்றி நடமாடுபவர் என்றும் அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர். இவர் குளத்தில் குளிப்பதை அந்தப் பகுதி மக்கள் கண்டுள்ளனர். சிறிது நேரத்தின் பின்னர் அவரைக் காணவில்லை. அவரது உடமைகள் குளத்தின் கரையோரம் காணப்பட்டன. …

Read More »

நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை தமிழர் போராட்டம் தொடரும்!

“தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை எமது இனத்தின் போராட்டம் தொடரும். எத்தனை தடைகள் வந்தாலும் அதைத் தகத்தெறிந்து போராடுவோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழர் தலைநகரான திருகோணமலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இரா.சம்பந்தன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். …

Read More »

தமிழர் தலைநகரில் தமிழரசின் பொங்கல் விழா!

தமிழர் தலைநகரான திருகோணமலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் விழா நடைபெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவர் ச.குகதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பொங்கல் பூஜை நிகழ்வுகளும், கலை நிகழ்வுகளும், கெளரவிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கலந்துகொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர்களான க.துரைரெட்ணசிங்கம், …

Read More »