Home / Srilanka News (page 3)

Srilanka News

ஆண், பெண் இருவரிடமும் உறவு கொள்வார்

நடிகை தனுஸ்ரீ தத்தா ஆண், பெண் என இருவரிடமும் உறவு கொள்வார் என நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஸ்ரீ தத்தா ஒரு ஓரின சேர்க்கையாளர் எனவும், தன்னையும் ஒருமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் கவர்ச்சி நடிகை ராக்கி சவாந்த் அதிரடியாக புகார் தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து பதிலடி கொடுத்தார் தனிஸ்ரீ தத்தா. இவ்வாறு …

Read More »

ரஜினி எந்த தொகுதியில் நின்றாலும் எதிர்ப்பேன்

புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ள இயக்குநர் கெளதமன், நடிகர் ரஜினி எங்கு போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார். இயக்குநர் கெளதம் புதிய கட்சியை இன்று ஆரம்பித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளராக அறியப்பட்ட கெளதமன், சொந்தமாக கட்சி தொடங்குவதாக இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கெளதமன் பேசுகையில், “ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பண்பாட்டை வென்றெடுத்த இளைஞர்கள், அரசியலையும் வென்றெடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் அரசியல் அமைப்பை தொடங்குகிறோம். …

Read More »

மைத்திரியை போட்டுத் தாக்க தயாராகியது அமெரிக்க அரசு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் கடும் சீற்றமடைந்துள்ள அமெரிக்க அரசு, தனது உயர்மட்டங்களில் இருந்து மிகத் தீவிரமான அழுத்தங்களைப் பிரயோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றது. இதன் ஓர் அங்கமாக நேற்று அமெரிக்கக் காங்கிரஸிடம் இருந்து காரசாரமான அவசர கடிதம் ஒன்று மைத்திரிபாலவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி கடும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என அரச வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் காரணமாக இலங்கைக்கு …

Read More »

இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த லாரி மோதி விபத்து

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்கார் படம் அடுக்கடுக்கான பல சர்ச்சைகளை எதிர்கொண்டு வந்தாலும் வசூலில் பட்டய கிளப்பியது. இதனால் விஜய்யை விட விஜய் ரசிகர்கள் மிகவும் குஷியானார்கள். இந்நிலையில் அண்மையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் குமார் (18), சக்தி (18) இருவரும் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இருவரும் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்கள். சர்கார் படம் இரவு காட்சி பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது …

Read More »

சர்கார் விவகாரம்: கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் வெளியான பிறகு கோமளவள்ளி என்பதைக் கூகுளில் பலரும் தேடியுள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார் பல சர்ச்சைகளைத் தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே சர்கார் திரைப்படத்தில் வில்லி கதாப்பாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். அவருக்குத் திரைப்படத்தில் கோமளவள்ளி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஜெயலலிதாவின் இயற்பெயர் எனச் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் அரசின் …

Read More »

ஓவியாவுடன் காதல்?

நானும் ஓவியாவும் காதலிக்கிறோம் என்ற செய்தி உண்மையில்லை என்று பிக் பாஸ் ஆரவ் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இதனிடையே சக போட்டியாளரான ஆரவ் ஓவியாவுக்கு இடையே ஏற்பட்ட காதல்-மோதல் எல்லாம் பிக் பாஸ் ரசிகர்கள் அறிந்ததே. இதையடுத்து ஆரவ் தன் காதலை நிராகரித்ததால் மனமுடைந்த ஓவியா வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது ஓவியாவும், ஆரவும் சகஜமாக பழகி வருகிறார்கள். …

Read More »

டிரம்ப் மீதான நம்பிக்கையை இளைஞர்கள் இழக்கிறார்களா?

அமெரிக்க இடைகால தேர்தல் முடிவுகள் குறித்து ஒரு தெளிவான சித்திரம் கிடைத்துவிட்டது. பெரும்பாலும் அனைவரும் எதிர்பார்த்தது போல ஜனநாயகவாதிகள் பிரதிநிதிகள் சபையிலும், செனட் சபையில் குடியரசு கட்சியும் வென்றுள்ளன. பெரிய வியப்பேதும் இல்லை என்றாலும், அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் என்னென்ன நேரும் என்ற கேள்வியை இந்த தேர்தல் முடிவுகள் ஏற்படுத்துகின்றன. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிகளவிலான எண்ணிக்கையில் பெண்கள் போட்டியிட்டார்கள், வெல்லவும் செய்திருக்கிறார்கள். முதல்முறை …

Read More »

கூட்டமைப்பிடம் கெஞ்சினார் மைத்திரி: நடுநிலை வகியுங்கள்!

நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரும்போது அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் எனவும், பிரேரணையை எதிர்த்து வாக்களிக்குமாறும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நேரில் கேட்டுக்கொண்டார். ஆனால், இந்த வேண்டுகோளுக்கு இணங்கமாட்டோம் என்று கூட்டமைப்பினர் தெரிவித்தபோது, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க முடியாவிட்டால் அதனை ஆதரிக்காமல் நடுநிலையாவது வகியுங்கள் எனவும் ஜனாதிபதி …

Read More »

வைரமுத்து ‘ட்விட்டரில்’ புது விளக்கம்…?

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழியில் தேர்வு எழுதக் கூடாது என துணைவேந்தரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து பல அறிஞர்கள் தமிழ் ஆன்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் போன்றோர் ஆங்கில் வழியில் மாணவர்கள் தேர்வு எழுதுவத பல்கலைக்கழகத்தால் கட்டாயப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு இவ்விவகாரம் குறித்து டிவிட் செய்துள்ளார். அதில் ,’அதிகார மையங்களில் நிலவும் மொழிதான் ஓர் இனத்தில் நிலைபெறும். தேர்வாணையத்தின் வினாத்தாள்கள் …

Read More »

பிரபல நடிகையுடன் அமைச்சர் ஜெயக்குமார் போட்டோ

சமூக வலைதளத்தில் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறு புகைப்படம் வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் திருமுட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமுத்து. சிங்கப்பூரில் பணியாற்றி வரும் இவர், கடந்த ஆண்டு அமைச்சர் ஜெயகுமார், பிரபல நடிகையுடன் இருப்பது போன்ற மார்பிங் புகைப்படம் ஒன்றை முகநூலில் பரப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில் வீரமுத்து மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்த போது அவர் சிங்கப்பூரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. …

Read More »