Home / Srilanka News (page 30)

Srilanka News

இலங்கை வருகிறதா ஐ.நா பாதுகாப்பு படை?

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய பிரதமராக ராஜபக்சே பதவியேற்றதால் அங்கு அரசியல் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இன்னும் பிரதமர் என்று கூறி வரும் ரணில், இலங்கையின் பாதுகாப்புக்கு ஐ.நா. படை வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக கூறப்பட்டது. இலங்கையில் கடந்த 2011ஆம் ஆண்டு விடுதலைபுலிகள் உடனான இறுதிப்போர் நடைபெற்றபோதே ஐ.நா பாதுகாப்பு படை அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. …

Read More »

ரஜினி, ஸ்டாலின் தலைமையில் இரண்டு அணிகள்

வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி தலைமையில் ஒரு அணியும் ஸ்டாலின் தலைமையில் ஒரு அணியும் உருவாகும் என சற்றுமுன் ரஜினியை சந்தித்த பின்னர் காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார். ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜன் அவ்வப்போது ரஜினியை சந்திப்பது உண்டு. அந்த வகையில் முரசொலி கட்டுரையால் ரஜினியும் திமுகவும் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியின் தலைவர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜன் ரஜினியை …

Read More »

விமான விபத்து: 189 பேர் பரிதாப பலி

இந்தோனேஷியா ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 189 பேரும் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தோனேசியா ஜகார்த்தாவில் இருந்து நேற்று காலை 6.20 மணிக்கு லயன் ஏர் நிறுவனத்தின் போயிங் 737 பயணிகள் விமானம் 6 பணிப்பெண்கள், 2 விமான ஓட்டிகளுடன் சேர்த்து 189 பேருடன் பங்கல் பினாங் தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்ட 13வது நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. …

Read More »

சர்வாதிகார ஆட்சியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது

அரசியலமைப்பிற்கு முரணான, சர்வாதிகார ஆட்சியை எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு பாராளுமன்றத்திலேயே தீர்வு உள்ளதாகவும், அதனால் பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார். மேலும் நல்லாட்சி அரசாங்கத்தில் மனித உரிமைகளை பாதுகாக்கப்பட்டு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதுடன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 19 ஆவது சீர்திருதத்தின் அடிப்படையில் …

Read More »

மைத்திரி – மஹிந்த கூட்டு வேட்டை! அர்ஜுன ரணதுங்க கைது!!

பெற்றோலிய வளத்துறை முன்னாள் அமைச்சரான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டார். பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு முன்னால் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் இருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பிலேயே, அர்ஜுன ரணதுங்க கைதுசெய்யப்பட்டுள்ளார். கொலன்னாவ பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு, பெற்றோலிய வளத்துறை முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, நேற்று மாலை சென்றிருந்தபோது, அங்கிருந்த மஹிந்த …

Read More »

களமிறங்கியது அமெரிக்கா! சபாநாயகருடன் அவசர சந்திப்பு

இலங்கையில் அரசுக்கு யார் தலைமையேற்பது என்பதை உறுதி செய்யும் பொறுப்புக்களை நிறைவேற்ற உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிக்கையூடாக அழுத்தம் கொடுத்திருந்த நிலையில், கொழும்பிலுள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவை அவசரமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து முக்கிய பேச்சு நடத்தப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது. இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் சபாநாயகர் விசேட அறிவிப்பை விரைவில் வெளியிடலாம் …

Read More »

நாட்டு மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்க விசேட உரை!

நாட்டின் அரசமைப்புக்கு அமைவாக தானே இன்னமும் பிரதமர் பதவியில் நீடிப்பதாக அறிவித்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றவுள்ளார். அலரிமாளிகையிலிருந்து மாலை 5.30 மணிக்கு இந்த விசேட உரையை அவர் ஆற்றுவார். The post நாட்டு மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்க விசேட உரை! appeared first on Tamil News Online | செ‌ய்‌திக‌ள்.

Read More »

விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கியது டெல்லி விமானி!

இந்தோனேஷியாவில் விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய விமானி டெல்லியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இந்தோனேஷியாவில், லயன் ஏர் என்ற விமானம் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. தலைநகர் ஜகர்தாவில் இருந்து தினமும் காலை பங்கல் பினாங்க் என்ற பகுதிக்கு இந்த நிறுவனத்தின் விமானம் இயக்கப்படுவது வழக்கம் வழக்கம் போல இன்று காலை 6.20 மணிக்கு, ஜேடி-610 என்ற எண் கொண்ட லயன் ஏர் விமானம் ஜகர்தாவில் இருந்து புறப்பட்டது. …

Read More »

சிறிசேனவின் நடவடிக்கைக்கு காரணம் என்ன?

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கு சிறிசேன தீர்மானித்தமைக்கு மூன்று சம்பவங்கள் காரணம் என இந்தியாவின் இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றும் மறுப்பொன்றும் செய்தியாளர் மாநாடொன்றுமே சிறிசேன இந்த முடிவை எடுப்பதற்கு காரணம் என முக்கிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இந்து நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளதாவது தேசிய அரசாங்கத்தின் முடிவு ஒருவார காலத்திற்கு முன்னரே …

Read More »

இலங்கை பாராளுமன்றம் முடக்கம்! சிறிசேனா அறிவிப்பு

தன் பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமண்ரத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கே அறிவித்திருந்த நிலையில் அதிபர் மைத்ரிபால சிரிசேனா திடீர் அறிவிப்பை வெளியிடிருக்கிறார். அதில் பகல் இன்று 1 மணியில் இருந்து நவம்பர் 16 வரை இலங்கை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்குவதாக அவர் அறிவித்திருக்கிறார். இலங்கையில் நாளொருமேனி பொழுதொரு வண்ணமாக நடந்து வரும் அரசியல் பரமபத விளையாட்டுகளால் அங்கு அடுத்து என்ன மாதிரியான சூழ்நிலை வரப்ப்போகிறது என கணிக்க …

Read More »